தனுஷ்-க்கே இந்த நிலைமையா? கேப்டன் மில்லர் படத்துக்கு வந்த பெரிய அடி..
ஹாலிவுட் நடிகராக தற்போது கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் தனுஷ், வாத்தி படத்தினை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி தான் மிகப்பெரிய பேச்சாக மாறியிருக்கிறது.
அதாவது கேப்டன் மில்லர் படம் பீரியட் படமாக எடுக்கப்பட்டு வருவதால் தென்காசி மாவட்டத்தில் மத்தளம் பாறை கிராமத்தில் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உரிய அனுமதியின்றி விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது.
இன்று மத்தளம் பாறை பகுதியில் ஸ்டண்ட் காட்சிகளில் குண்டுவெடிக்கும் சம்பவம் நடந்ததால் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்கு 2 வாரம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் கேப்டன் மில்லர் படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.
சமீபகாலமாக தனுஷ் படங்களுக்கு பல எதிர்ப்புகளும் பிரச்சனைகளும் நடைபெறுவது அதிகரித்துள்ளாதால் தனுஷ் மிகவும் அப்டெட்டாக இருந்து வருகிறாராம்.