நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!! அந்த நடிகர் தான் காரணமா?

Soundarya Gossip Today Tamil Actress Actress
By Edward Mar 12, 2025 06:30 AM GMT
Report

செளந்தர்யா மரணம்

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை செளந்தர்யா. அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார் நடிகை செளந்தர்யா.

நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!! அந்த நடிகர் தான் காரணமா? | Complaint Filed Against Mohan Babu Soundarya Death

கடந்த 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி அவரது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூருவுக்கு செஸ்னா 180 என்ற விமானத்தில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே செளந்தர்யா மரணமடைந்தார்.

இதுகுறித்து 21 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆந்திரவை சேர்ந்த ஒரு நபர் ஒரு புகாரளித்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!! அந்த நடிகர் தான் காரணமா? | Complaint Filed Against Mohan Babu Soundarya Death

மோகன் பாபு

ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல கொலை.

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் செளந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் செளந்தர்யாவின் ஜல்பள்ளி கிராமத்தில் இருக்கும் நிலத்தை மோகன் பாபு கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அந்த புகாரில் சிட்டிமல்லு தெரிவித்துள்ளார்.