எல்லைமீறும் மார்ஃபிங் விசயத்தால் கண்டீசன் போட்ட சூப்பர்ஸ்ஸ்டார்.. செக் வைத்த ரஜினிகாந்த்..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பல விசயங்களை செய்து வரும் ரஜினிகாந்த் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய புகைப்படம் மற்றும் பெயர், குரல் ஆகியவற்றை வைத்து வர்த்தக ரீதியாக பயன்படுத்தி தவறான நோக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.
அதை மீறி இனிமேல் செய்தால் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வழக்கு பதியப்படும் என்று ரஜினிகாந்த் வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இது சூப்பர் ஸ்டாரை போல் டப்பிங் செய்தும் வேடமிட்டும் ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.
அது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும் என்று சிலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த கண்டீசனை போட்டுள்ள சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாகவும் அவரது ரசிகர்கள் வரவேற்பும் கொடுத்து வருகிறார்கள்.