குக் வித் கோமாளி 6!! Danger Zone-ஆல் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?
குக் வித் கோமாளி 6
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் சீசன் 6 தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு, செளந்தர்யா சில்லுகுரி என இருவர் ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியேறியிருக்கிறார்கள்.
மீதம் 8 பேர் இருக்கும் நிலையில் இந்த வாரம் போட்டியில், மதுமிதா முதல் இடத்தினை பிடித்து செஃப் ஆப் தி வீக்கை கைப்பற்றி இருக்கிறார். இவரை தொடர்ந்து, உமை இரண்டாம் இடத்தினையும், நந்த குமார் 3வது இடத்தினை பிடித்துள்ளனர்.
Danger Zone
4வது இடத்தில் ஷபானா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பிடித்துள்ளனர். 6வது இடத்தினை பிரியா ராமன் பிடித்திருக்கும் நிலையில் இருவர் Danger Zoneக்கு சென்றுள்ளார்.
அதில் ராஜு ஜெயமோகன் மற்றும் சுந்தரி Danger Zoneல் இருந்துள்ளதால், வரும் வார இருவரும் சிறப்பாக விளையாடி Danger Zoneல் இருந்து தப்பிக்க வேண்டும். அப்படி சரியாக விளையாடாத போட்டியாளர்கள், இரு வார எபிசோட்டுக்கு பின் எலிமினேட் செய்யப்படுபவர் யார் என்று தெரியவரும்.