குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய உமைர்.. முதல் பைனலிஸ்ட்டாக தேர்வான போட்டியாளர்.. யார் தெரியுமா
நகைச்சுவை மற்றும் சமையல் இரண்டையும் கலந்து மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மக்கள் மனதில் தனி இடத்தை குக் வித் கோமாளி பிடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. ஆனாலும் மக்கள் மத்தியில் இதற்கென்று தனி வரவேற்பு எப்போதுமே இருந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த சீசன் 6ல் மூன்று நடுவர்கள் இருக்க 10 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள்.
இதில் இந்த வாரம் உமைர் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில், ஷபானா, ராஜு, பிரியா ராமன், நந்தகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் என 5 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே சுற்று நடைபெற்றது.
இதில் ஐந்து போட்டியாளர்களிடைய நடந்த போட்டியில் நன்றாக சமைத்து டிக்கெட் டு பினாலே சுற்றை வென்றுள்ளார் நடிகை ஷபானா. இதன்மூலம் ஷபானா நேரடியாக குக் வித் கோமாளி பைனலிஸ்ட் ஆகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.