நிகழ்ச்சிக்கு குடிச்சிட்டு வந்த கோமாளியை விரட்டி அடித்த தொலைக்காட்சி!! வீட்டில் இடம் கொடுத்த நடிகர்..
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய், பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிப்பரப்பு செய்து நல்ல வரவேற்பை மக்களிடம் இருந்து பெற்று வருகிறது. அந்த வரிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதர்வை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
சமையல் போட்டியை மையமாக கொண்டு கோமாளி செய்யும் அட்ராசிட்டியோடு கலக்கலப்பாகி ஒளிப்பரப்பாகி வருகிறது. கோமாளிகள் செய்யும் அட்ராசிட்டி மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சி மூலம் பல கோமாளிகளும் குக்-களும் படங்களில் நடித்து பிரபலமாகியும் வருகிறார்கள். அந்தவகையில், இந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 4 ஆரம்பித்துள்ளனர். அதில் கோமாளியாக ஓட்டேரி சிவா என்பவர் கலந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் எபிசோட்டில் அவர் குடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறி நிகழ்ச்சியை விட்டு விலக்கப்பட்டார். இதன்பின் பேட்டிகளில் நான் குடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷால், ஓட்டேரி சிவாவை கூப்பிட்டு தன்னுடைய அலுவலகத்தில் பலவற்றை கேட்டு இங்கேயே சாப்பிட்டு தூங்கிக்கோ. வாய்ப்பு வந்து சம்பாதித்தால் யாருகிட்டயும் கொடுத்திறாத என்று கூறு ஆறுதலளித்துள்ளார் நடிகர் விஷால்.
சின்ன கலைஞர்களை டாப் நடிகர்கள் மதிக்காத சூழலில் விஷால் செய்த செயல் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.