காதலித்த பெண்ணை மூன்று முறை திருமணம் செய்து கொண்ட விஜய்டிவி புகழ்.. வைரலாகும் புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியான ஸ்டார் விஜய்யில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பலரால் அறியப்பட்டவர் புகழ். அதன்பின் பல ஆண்டுகளாக முன்னேறாமல் தவித்து வந்தார். பின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு சாம்பியன் போன்ற நிகழ்ச்சிகளால் மக்கல் மனதை ஈர்த்து வந்தார்.
தன்னுடைய முக பாவனையால் மக்களை சந்தோஷப்படுத்தி புகழ் தான் காதலித்து வந்த பென்சியா என்பவரை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் பென்சியை சில வருடங்களுக்கு முன் பெரியா பதிப்பகத்தில் திருமணம் செய்து பதிவு செய்திருந்தனர்.

இதனால் அவர் கிறிஸ்தவ முறைப்படி இரண்டாம் முறை பென்சியாவை திருமணம் செய்திருக்கிறார். மேலும், தற்போது மூன்றாவது முறையாக முஸ்லீம் முறைப்படியும் திருமணம் செய்திருக்கிறார் புகழ். இதை பலர் விமர்சித்து ட்ரோல் செய்து வந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் என் அப்பாவுக்காக ஒருமுறை, எம் அம்மாவுக்காக ஒருமுறை, என் மனைவிக்காக ஒருமுறை. உங்கள் அன்புக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என்றும் நான் இந்தியனாக இருக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் திருமணம் முடிந்ததும் தன்னை சின்னத்திரையில் அறிமுகப்படுத்திய மறைந்த வடிவேலு பாலாஜி புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி ஆசீர்பெற்றுள்ளனர்.
தற்போது புகழ் பல படங்களில் காமெடி நடிகராகவும் Zoo Keeper என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.


