எங்கடா புகழ காணோம் வாய்ஸ் மட்டும் வருது! குக்வித் கோமாளி 3 பிரமோ வீடியோ..

bala aswin television shivaangi pugazh cookwithcomali cwc cookwithcomali3
By Edward Dec 29, 2021 05:40 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக டிஆர்பியில் நல்ல இடத்தினை கொடுத்து அனைத்து மக்களையும் கவர்ந்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி. முதல் சீசன் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆரம்பித்து 2ஆம் சீசன் பெரியளவில் யாரும் எதிர்ப்பார்க்காத வெற்றியை கொடுத்தது.

அதற்கு காரணம் கோமாளி மற்றும் போட்டியாளர்கள் தான். குறிப்பாக புகழ், ஷிவாங்கி, பவித்ரா, அஸ்வின், பாலா உள்ளிட்டவர்களின் காமெடி தான் காரணம். கடந்த ஆண்டு கனி டைட்டிலை வென்றிருந்தார். தற்போது எப்போது குக்வித் கோமாளி 3 சீசன் ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.

அதற்கு டிரீட்டாக குக்வித் கோமாளியின் 3வது சீசனின் பிரமோ வீடியோ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கலர்ஃபுல்லாக வெளியாக இந்த பிரமோவில் செஃப் தானு, வெங்கடேஷ் பட், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா போன்றவர்கள் மட்டும் இருந்துள்ளனர்.

இதை பார்த்த ரசிகர்கள் எங்கடா புகழ காணோம், அவர் வாய்ஸ் மட்டும் கேக்குது என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Gallery