என்ன வாய்டா இது.. மணிமேகலை சொன்னது நடந்துடுச்சு! CWCல் முக்கிய போட்டியாளர் அவுட்
Cooku with Comali
By Parthiban.A
குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதால் யார் வெளியே போக போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரொமோவில் பதில் கிடைத்துவிட்டது.
இந்த வார நிகழ்ச்சியில் தொடக்கத்திலேயே மணிமேகலை பாட்ஷா கெட்டப்பில் வந்து 'கிரேஸ் மற்றும் வித்யூலேகா ஆகியோர் இதுவரை எலிமினேஷனுக்கு வந்ததே இல்லை, அவர்கள் இந்த வாரம் வரவேண்டும்' என கூறினார்.
அவர் சொன்னது போலவே இறுதியில் அவர்கள் இருவர் தான் எலிமினேஷன் சுற்றில் வந்து நிற்கின்றனர். அதில் வித்யூலேகா எலிமினேட் ஆனது போல நடுவர் சென்று கைகொடுக்கிறார். அது தற்போது வந்திருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
மணிமேகலை சொன்னது அப்படியே நடந்துவிட்டது.. இப்போ டைட்டிலை படிங்க.