குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர் இவர் தானா.. யார் தெரியுமா! உறுதியான தகவல்
Priyanka Deshpande
Cooku with Comali
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 5வது சீசன் இந்த ஆண்டு துவங்கியது.
குக் வித் கோமாளி 5 துவங்கிய நிலையில் முந்தைய சீசன்களை விட இதில் நகைச்சுவை பெரிதளவில் இல்லை என பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. ஆனாலும் குரேஷி, புகழ் ஆகியோரின் பங்களிப்பு மக்களை கலகலப்பாக வைத்து கொண்டது.

இந்த நிலையில் இறுதிச்சுற்று படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.
ஏற்கனவே மணிமேகலை - பிரியங்கா இடையே சர்ச்சை வெடித்துள்ள நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ன் கோப்பையை பிரியங்கா வென்றுள்ளது நெட்டிசன்கள் இடையே இன்னும் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
