கூலி படத்தால் எனக்கு ஏமாற்றம்..அப்செட் ஆகிட்டேன்!! நடிகை ரெபா மோனிகா உருக்கம்..
ரெபா மோனிகா ஜான்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரெபா, தென்னிந்திய படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் சத்யராஜின் 3 மகள்களில் ஒருவராக நடித்திருந்தார் ரெபா மோனிகா. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் சாட்டில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
கூலி படத்தால் எனக்கு ஏமாற்றம்
அதில், கூலி படத்தில் நடித்ததில் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டேன். எனக்கு அது ஏமாற்றம் தான், நிறைய காட்சிகள் வரும் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால் அதுதான் சினிமா எதையும் நாம் முடிவு செய்யமுடியாது, ஆனாலும் தலைவர் படத்தில் ஒரு சின்ன ரோலில் இருந்ததே ரொம்ப சந்தோஷம் தான். கூலி படத்தில் நடித்ததற்காக பலரும் பாராட்டி மெசேஜ் செய்தீர்கள், அதற்கெல்லாம் நான் தகுதியானவளாக எதையும் செய்யவில்லை, ஆனால் மகிழ்ச்சி என்று ரெபா மோனிகா ஜான் தெரிவித்துள்ளார்.
#RebaMonicaJohn #Coolie #Rajinikanth #LokeshKanagaraj pic.twitter.com/b0bHzhTSAk
— Shameena (@shameena_111) September 24, 2025
இதனையடுத்து ரெபா மோனிகாவை ரசிகர்கள் விமர்சித்த நிலையில், படத்தின் பிரமோஷன் சமயத்தில், கூலி படத்தின் காஸ்டியூம் டிசைனர் பிரவீனிடம் நான் தலைவர் ரசிகை என்பதால் கூலி படத்தில் ஏதாவது ஒரு வாய்ப்பு பெற்றுத்தரும்படி கேட்டிருந்தே. லோகேஷ் கனகராஜ் ஆபிஸுக்கு வரும்படி கூறியதால் அங்கு சென்றேன்.
அப்போது பிகில் படத்தில் கிடைத்த கதாபாத்திரம் போன்று கூலி படத்தில் இருக்காது, ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் சொல்கிறேன். அந்த ரோல் எப்படி இருந்தாலும் சரி என்று லோகேஷ் சார் சொன்ன கதை பிடித்ததால் கேமியோவில் நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன், ரஜினி சாருடன் நடிக்க சான்ஸ் கிடைச்சது என்று ரெபா மோனிகா கூறியிருக்கிறார்.