5 ஆயிரம் பணத்துக்காக நான் இறந்துட்டேன்னு சொன்னாங்க!! இட்லி கடை மேடையில் பார்த்திபன்..
பார்த்திபன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் பார்த்திபன், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துக்கொண்டு சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் யூடியூப் வீடியோ லிங்க் என்றை பகிருந்து, இந்த லிங்கில், சற்று முன் பரபரப்பு..பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று எழுத்தப்பட்டுள்ளது என்று கூறி அதனை கண்டித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தில் பார்த்திபன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், தான் இறந்துவிட்டதாக கூறி செய்திகள் வெளியாவதை பற்றி பேசியுள்ளார்.
நான் இறந்துட்டேன்னு சொன்னாங்க
அதில், என்னை பற்றி யூடியூப், சோசியல் மீடியாக்களில் ஒரு துக்க செய்தி வந்தது. பொதுவாக என்னை பற்றி மட்டுமில்லாது, பல நடிகர்கள் காலமாகிவிட்டார், இறைவனடி சேர்ந்துவிட்டார்னு துக்க செய்தி வரும். அதை ஒளிப்பரப்புற யூடியூப் சேனலுக்கு மிஞ்சிப்போன 5 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும்.
அதுக்காக உயிரோட இருக்கிற ஒரு மனுஷனை சாகடிக்கிற இந்த சொசைட்டில அன்பு எங்க கிடைக்கும். அன்பு எங்க கிடைக்கும் என்றால் மதுரையில், தனுஷ் என்கிற ஒரு நடிகனுக்காக, தனுஷ் என்கிற இயக்குநருக்காக, தனுஷ் என்கிற மகாகலைஞருக்காக, இப்படி உயிரையே மாற்றி வைத்திருக்கிற இங்கதான் அந்த அன்பு கிடைக்கும் என்று பார்த்திபன் பேசியிருக்கிறார்.