பாபா பாஸ்கரை அசிங்கப்படுத்திய குக்வித் கோமாளி கனி! லைவ் ஷோவில் நடந்த விபரீதம்..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த இரு வருடங்களாக தமிழ் ரசிகர்களை குதுகளப்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இரண்டாம் சீசன் ஆரம்பித்து சில வாரங்களுக்கு முன்பு தான் கனி டைட்டிலை கைப்பற்றினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து குக் வித் கோமாளிகளும் போட்டியாளர்களும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியின் போது பாபா பாஸ்கருக்கும், கனிக்கும் இடையில் சிறுசிறு காரச்சாரமான சண்டைகள் ஏற்பட்டு வந்தன. அப்போது கனிக்கு காரக்குழம்பு கனி என்று பாபா பாஸ்கர் பெயர் வைத்து கூப்பிட்டு வந்தார்.

தற்போது ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாபா பாஸ்கரிடம் கனி, ‘அசிங்கமாயிடும் போங்க’ என்று சொல்ல உடனே டென்ஷனான பாபா பாஸ்கர் ’என்ன அசிங்கம் ஆயிடும்’ என்று திருப்பி விவாதம் செய்தார். உண்மையாக இது பாபா பாஸ்கரை கஷ்டப்படுத்தியதால் இப்படி நடந்து கொண்டாரா?

இல்லை நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக பிராங்க் செய்யப்பட்டதா? என்று நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் போது தெரியும். தற்போது அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்