நடிகருடன் நெருக்கமான காட்சி..கதறி அழுதும் மனமிறங்காத பெற்றோர்!! கூலி பட நடிகை ஆதங்கம்..
ரச்சிதா ராம்
கன்னட சினிமாவில் தனது திறமையால் ரசிகர்களின் இதயங்களை கைப்பற்றியவர் ரச்சிதா ராம். இவர் முதன் முதலாக கூலி படத்தில் வில்லி ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். தற்போது 33 வயதான நடிகை ரச்சிதா ராம் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நடிகை ரச்சிதா ராம் ஐ லவ் யூ என்ற ஆங்கில படத்தின் ரீமேக்கில் நடித்தார்.
அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் ரச்சிதாவுக்கு அதில் சந்தோஷம் கிடைக்கவில்லை. படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சியொன்றில் ரச்சிதா நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவரது பெற்றோர் தங்கள் மகள் அதுபோல காட்சியில் நடிப்பதை விரும்பவில்லை.

என் அப்பா என்னை
இதுதொடர்பாக அவரளித்த பேட்டியொன்றில், இப்படம் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களையும், அவர் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றியும் பேசியுள்ளது. அதில், நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்காக நான் வருத்தப்படவில்லை.
அது தன்னுடைய பெற்றோருக்கு பிடிக்கவில்லை, நான் இன்னும் ஒரு குழந்தைதான் என்றும் இதுபோன்ற வேடத்தில் நடித்ததால் அவர்கள் வருத்தப்பட்டதாகவும் ரச்சிதா தெரிவித்துள்ளார்.

மேலும் உன்னை ஒரு நடிகையாக ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் உன்னை ஒருபோதும் மகளாகப் பார்க்கமாட்டேன் என்று என் அம்மா கூறியதாகவும் இதனால் அம்மா, அப்பா இருவரிடமும் உடனடியாக மன்னிப்பு கேட்டேன். இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று பெற்றோரிடம் உறுதியளித்ததாக கண்ணீர்விட்டேன்.
இன்றுவரை என் அப்பா என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார், நான் இன்னும் என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர்களுக்கு என் வலி தெரியும், அவர்களை யார் சந்தோஷப்படுத்த முடியும், நான் நடிக்க வந்ததில் அவர்களுக்கு மிகவும் மோசமான அனுபவம் ஏற்பட்டது. என் குடும்பம்தான் எனக்கு எல்லாமே, குடும்பத்திற்குப்பின், மற்ற அனைத்தும் என்று கூறியிருக்கிறார் ரச்சிதா ராம்.