மீண்டும் மீண்டும் அட்டர் காப்பியில் சிக்கும் அனிருத்!! கூலி பிரமோ வீடியோவால் காலியான ராக் ஸ்டார்..
அனிருத்
இசையமைப்பாளர் அனிரூத் தற்போது ரஜினிகாந்தின் கூலி, ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில், படத்தில் முக்கிய ரோல்களின் முகத்தை காட்டாமலே அடையாளத்தும் வகையில் பிரமோ வீடியோ ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டனர்.
கூலி 100 Days to Go
அரங்கம் அதிரட்டும் விசில் பறக்கட்டும் என்ற கேப்ஷனுடன் உருவான அந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றாலும் சமூக ஊடகங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே அனிருத் சில இசையை மற்றவர் போட்ட இசையை காப்பி அடித்து பயன்படுத்துவார் என்று விமர்சனமும் எழுந்து வருகிறது.
அந்தவகையில் அமெரிக்க ராப்பர் லில் நாஸ் எக்ஸின் 'இண்டஸ்ட்ரி பேபி' என்ற பாடலை அனிருத் காப்பியடித்து தான் அந்த இசையை போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.