தமிழகத்தில் வசூல் வேட்டையாடிய கூலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Rajinikanth Box office Coolie
By Kathick Sep 02, 2025 04:30 AM GMT
Report

ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. முதல் முறையாக ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து இருந்தனர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் அமீர் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

தமிழகத்தில் வசூல் வேட்டையாடிய கூலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Coolie Tamilnadu Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர். ஆனாலும் கூட உலகளவில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை கூலி படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 151 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.