ஒல்லி பாடகி, வாரிசு நடிகையுடன் லீலை!! செல்லமான பாடகியையும் விட்டுவைக்காத இசையமைப்பாளர்..
இந்திய சினிமா வரை தற்போது பிரபலமானவர் தான் அந்த இசையமைப்பாளர். தற்போது பட்டித்தொட்டி எங்கும் தன் திறமையை காமித்து சினிமாவையே ஆக்கிரமித்து வருகிறார். அப்படி இருந்தால் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கியவர்.
பன்முகத்திறமை கொண்ட இசையமைப்பாளர், அழகான க்யூட்டான ஒல்லியாக இருக்கும் நடிகையை காதலித்து நெருக்கமாகவும் இருந்துள்ளார். இருவரும் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னைவிட வயது அதிகமான நடிகையை காதலித்ததால் பல ட்ரோல்களுக்கு ஆளாகியதால் இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன்பின் பிரபல வாரிசு நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் செய்திகள் லீக்கானது.
நடிகையின் பெற்றோர்கள் தேவையில்லாத வதந்திகள் பரப்ப வேண்டாம் என்று அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.
தற்போது இசையமைப்பாளர் செல்லமான பாடகி ஒருவரின் குரல் பிடித்து போக, காதலித்து வருவதாகவும், டேட்டிங் அழைத்து சென்று மகிழ்ந்து வருகிறாராம். இதனால் இசையமைப்பாளரின் பெற்றோர்கள் திருமணத்தை முடிக்க பெண் பார்த்து வருகிறார்களாம். இந்த விசயம் தற்போது கோடம்பாக்கத்தில் அங்கும் இங்குமாக பேசப்பட்டு வருகிறது.