நானும் சுனிதாவும் காதலிக்கிறோமா.... ஓபனாக கூறிய உமைர்

Tamil Cinema Cooku with Comali
By Yathrika Apr 19, 2026 05:30 PM GMT
Report

சுனிதா-உமைர்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

சமையல், காமெடி, கலாட்டா என மக்களை என்டர்டெயின் செய்யக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் உள்ளது. இப்போது புதிய சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஆரம்பித்த சில நாட்களில் ஒரு பிரச்சனை வேறு ஓடிக் கொண்டிருக்கிறது.

நானும் சுனிதாவும் காதலிக்கிறோமா.... ஓபனாக கூறிய உமைர் | Cwc Fame Umair About Sunitha Open Talk

கடந்த குக் வித் கோமாளி சீசன் மூலம் கியூட் ஜோடி என மக்களால் கொண்டாடப்பட்டவர்கள் தான் சுனிதா மற்றும் உமைர். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என நிறைய பேச்சு உள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் உமைர் பேசும்போது, நானும் சுனிதாவும் நல்ல நண்பர்கள், எனக்கு சென்னையில் அவர் நிறைய உதவிகள் செய்துள்ளார்.

என்னை தாண்டி அவரும் எனது அம்மாவும் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்கள். எங்களுக்குள் அழகான நட்பு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.