பிக்பாஸ் 9 போகாததற்கு காரணம் என்ன... CWC உமைர் சொன்ன விஷயம்

Tamil TV Shows Bigg boss 9 tamil
By Yathrika Oct 15, 2025 07:30 AM GMT
Report

உமைர் லத்தீப்

சிவகாரத்திகேயன் நடித்த அமரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனம் பெற்றவர் உமைர் லத்தீப்.

அதன்பின் விஜய் டிவி பக்கம் வந்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தி வந்தார். அந்த நிகழ்ச்சியால் உமைர் லத்தீப் மற்றும் சுனிதா இருவரும் காதலிக்கிறார்கள் என் கிசுகிசு எல்லாம் வந்தது.

ஆனால் அந்த தகவலை இருவரும் மறுத்துவிட்டார்கள். அடுத்து உமைர் பிக்பாஸ் 9ல் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வலம் வந்தது.

இதுகுறித்து உமைர் ஒரு வீடியோவில், பிக்பாஸ் 9 போகலாம் நல்ல ஷோ தான். ஆனால் இப்போது 5 படத்தில் கமிட்டாகியுள்ளேன். மேலும் சில நிகழ்ச்சிகளில் கமிட்டாகியுள்ளதால் பிக்பாஸ் செல்லவில்லை என கூறியுள்ளார்.

பிக்பாஸ் 9 போகாததற்கு காரணம் என்ன... CWC உமைர் சொன்ன விஷயம் | Cwc Umair About Why He Reject Bigg Boss 9