13 ஆண்டு வாழ்க்கைக்கு டாட்டா! மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் இமான்..

annaatthe viswasam dimman musicdirector monica richard
By Edward Dec 29, 2021 06:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானார் டி இமான். இதையடுத்து முன்னணி நடிகர்கள் நடிகைகள் படத்தில் இசையமைத்து கொடிக்கட்டி பறந்தார்.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்திற்காக இசையமைத்து கலக்கினார். இந்நிலையில் 13 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் இமான்.

கடந்த 2020ல் என் மனைவி மோனிகா ரிச்சர்ட்டுடன் சமரசம் செய்து விவாகரத்து வாங்கி இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறோம். தற்போது இருவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. என்னை நேசிப்பவர்களுக்கு கூறுவது, இந்த சமயத்தில் நீங்கள் எங்கள் அடுத்தக்கட்ட வாழ்விற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.