அந்த மாறி காட்சிகளில் கமலை காப்பி அடித்த கவின்.. இப்படி பண்ணிட்டாரே
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இவருக்கு கிடைத்த இந்த புகழ் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2021-ம் ஆண்டு இவர் நடிப்பில் லிப்ட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.
தற்போது கவின் நடிப்பில் கே கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாடா திரைப்படம் இன்று வெளியானது. இதில் அபர்ணாதாஸ், வி டிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
படம் காப்பியா?
பிரபல திரைப்படம் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் டாடா படத்தை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், " உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தின் கதையை அப்படியே டாடா படத்தில் எடுத்து வைத்துள்ளார்கள்.
இந்த படத்தை பார்க்கும் போது சீரியல் பார்ப்பது போல் இருந்தது" என்று கூறியுள்ளார்.