ஆடிஷனில் மோசமாக தொட்ட தென்னிந்திய இயக்குநர்!! நடிகை டெய்ஸி ஷா குற்றச்சாட்டு..

Gossip Today Indian Actress Tamil Actress
By Jai Apr 18, 2026 06:30 AM GMT
Report

டெய்ஸி ஷா

இந்தி சினிமாவில் பல படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடன கலைஞராக இருந்து நடனமாடி பிரபலமானவர் தான் நடிகை டெய்ஸி ஷா. தமிழில் பொறி, மலை மலை போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து வந்தார்.

ஆடிஷனில் மோசமாக தொட்ட தென்னிந்திய இயக்குநர்!! நடிகை டெய்ஸி ஷா குற்றச்சாட்டு.. | Daisy Shah Recall Uncomfortable With South Dircetr

அதன்பின் மலையாளம், இந்தி கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி வந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக திகழ்ந்து வரும் டெய்ஸி ஷா, தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னை மோசமாக தொட்டதாக கூறி புகாரளித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மோசமாக தொட்ட இயக்குநர்

பேட்டியொன்றில் பேசிய டெய்ஸி ஷா, பிரபல தென்னிந்திய இயக்குநர், தன்னுடைய அடுத்த பட ஹீரோயினை தேர்வு செய்வதற்காக மும்பையில் ஆடிஷன் வைத்தார். அந்த ஆடிஷனின் தான் உட்பட 6,7 பேர் கலந்து கொண்டோம்.

ஆடிஷனில் மோசமாக தொட்ட தென்னிந்திய இயக்குநர்!! நடிகை டெய்ஸி ஷா குற்றச்சாட்டு.. | Daisy Shah Recall Uncomfortable With South Dircetr

அப்போது ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவழைத்து ஆடிஷன் நடத்தினார். அப்போது என்னிடம் முறையற்ற முறையில் தன்னை தொட்டதாகவும் பின்னர் இதுகுறித்து அறிவிப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பியதாகவும் அதன்பின் அந்த இயக்குநரை தான் பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார் டெய்ஸி ஷா.

இயக்குநர் யார்? எந்த படத்தின் ஆடிஷன் என்று அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.