சின்ன வயசுல 5, 6 பேர் என்னிடம் தப்பா நடந்துக்கிட்டாங்க!! நடிகை லரலட்சுமியின் எமோஷ்னல்..

Sneha Varalaxmi Sarathkumar Dance Jodi Dance
By Edward Mar 22, 2025 08:30 AM GMT
Report

வரலட்சுமி

சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார், அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் 13 வருடங்களுக்கு முன் உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது.

சின்ன வயசுல 5, 6 பேர் என்னிடம் தப்பா நடந்துக்கிட்டாங்க!! நடிகை லரலட்சுமியின் எமோஷ்னல்.. | Dance Jodi Dance Reloaded 3 Varlaxmi Emotional

கடந்த ஆண்டு தனது காதலர் நிகோலாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழில் நடைபெற்று வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நடன நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ்

இந்நிகழ்ச்சியின் இந்த வார எபிசோட்டில், போட்டியில் பங்கேற்று வரும் கெமி, தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் அத்துமீரல் பற்றி கூறி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

இதனால் மனமுடைந்த வரலட்சுமி, எனக்கு சின்ன வயதில் இப்படி நடந்திருக்கிறது என்று கூறி அழுதுள்ளார். நானும் உன்ன மாதிரிதான், அப்பா, அம்மா வேலைக்கு போயிடுவாங்க. மத்தவங்க வீட்டுல விட்டு போயிடுவாங்க.

நான் சின்ன வயசா இருக்கும் போது 5, 6 பேர் என்னிடம் தப்பா நடந்துகிட்டு இருக்காங்க. எனக்கு குழந்தை இல்ல, ஆனா நான் எல்லா பெத்தவங்களுக்கும் சொல்ற விஷயம், உங்க குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்னன்னு சொல்லிக்கொடுங்க என்று வரலட்சுமி கண்கலங்கியபடி கூறியிருக்கிறார்.