விஜய் டிவி பிரபலம் டிடி பதிவிட்ட புதிய ரீல்ஸ்! அதுவும் எந்த மாதிரி ஆடைன்னு நீங்களே பாருங்கள்

Dhivyadharshini
By Jeeva Aug 29, 2022 02:40 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இதன்பின் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டியெடுத்து பெரியளவில் பிரபலமான டிடி சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.

சுமார் 23 ஆண்டுகளாக தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து பின் பாலிவுட் முதல் தென்னிந்திய சினிமாவின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி லட்சத்தில் சம்பளம் வாங்கும் விஜே-வாக இருந்து வருகிறார்.

ஒரு சில படங்களில் நடித்துள்ள டிடி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்-ஆகவும் இருந்து வருகிறார். 37 வயதாகிய டிடி இன்னும் இளமையுடன் ரசிகர்களை கவரும் வண்ணம் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் டிடி. அதில் இந்தியன் பட பாடலுக்கு ஏற்றார் போல் தனது உடையை மாற்றி ரீல்ஸ் செய்து இருக்கிறார்.

செம மார்டன் உடையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, இதோ