அரபிக் குத்துக்காக பீஸ்ட்-டை பார்க்க சொல்லும் தொகுப்பாளினி டிடி! வெச்சு செய்த நெட்டிசன்கள்

vijay nelson divyadharshini beast arabickuthu anchiordd
By Edward Apr 14, 2022 03:30 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதினை ஈர்த்து வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி யில் ஆரம்பித்து தற்போது வரை 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளர் பணியில் இருந்து வருகிறார்.

தொலைக்காட்சிகளிலேயே மூத்த தொகுப்பாளினி வரிசையில் டிடியும் டாப் இடத்தில் இருக்கிறார். அப்படி நட்சத்திரங்களை பேட்டிகாண்பதிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். தற்போது ஒருசில படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பீஸ்ட் படம் குறித்து சர்ச்சை பதிவினை போட்டுள்ளார். அதில், அரபிக் குத்து ஒரு சாங் போதும், விஜய் ரசிகர்களின் முழு காசு வசூல் தான் பீஸ்ட். சார் சூப்பரா ஆடுவார்னு எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும், வாயை பிளந்து கொண்டு என்னப்பா இவரு இப்படி ஆடுறாருனு தான் சொல்லுவீங்க. முழுவதும் விஜய் ரசிகர்களுக்கான படம் நெல்சன் நீங்க ஒரு உண்மையான ரசிகர் ரசிச்சு எடுத்து இருக்கீங்க என்றும் கூறியுள்ளார்.

மேலும் எல்லா காட்சியிலும் சார் ஒரு ஹாலிவுட் ஸ்டார் மாதிரி சிறப்பா செதுக்கி இருக்கீங்க மனோஜ் மற்றும் அனிரூத். மேலும் செல்வராகவன், விடிவி, சதிஷ், சுனில், பூஜா ஹெக்டே உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கும் வாழ்த்து கூறினார்.

இதற்கு ரசிகர்கள் மொத்தத்துல ஒரு பாட்டுக்காக படம் பாக்கலாம்னு சொல்றீங்களா? என்றும் இதுக்காக 1000 கொடுத்து பாக்கனுமா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery