கர்ப்பமாக இருக்கும் போது அந்த மாதிரி காட்சியில் நடிக்கும் தீபிகா படுகோன்!! அதிர்ச்சியான ரசிகர்கள்..
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் தீபிகா படுகோன். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பின் STR 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தீபிகா படுகோன் கடந்த 2018 -ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன், SinghamAgain என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது. அதில் போலீஸ் உடையில் இருக்கும் நடிகை தீபிகா படுகோன், ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், என்னது தீபிகா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாரா என்று ஷாக்காகி உள்ளனர்.
இதோ புகைப்படம்.