11 வருட திருமண வாழ்க்கை!! துன்புறுத்திய மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர் தவான்..
Shikhar Dhawan
Gossip Today
Divorce
By Edward
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரராக இருந்து பல வெற்றிகளை தேடிக்கொடுத்தவர் ஷிகார் தவான்.
ஓப்பனிங் பேட்ஸ்மனாக இருந்து வந்த ஷிகார் தவான், சமீபகாலமாக இந்திய அணிகளில் இடம்பெறாமல் வாய்ப்பில்லாமல் இருந்து வந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வந்த நிலையில், தவான் பெரிய முடிவொன்றினை தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்திருக்கிறார்.
2012ல் ஏஷா முகர்ஜியை திருமணம் செய்து ஸோராவர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்த தவான் 13 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்துக்கு கோரியிருந்தார்.
தன்னை மனைவி ஏஷா மனரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் கேட்டிருந்தார். தற்போது அதை ஏற்று டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்தை வழங்கியிருக்கிறது.