துணை முதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
                                    
                    Udhayanidhi Stalin
                
                        
        
            
                
                By Kathick
            
            
                
                
            
        
    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து நகைச்சுவை கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் கெத்து, கலகத்தலைவன், நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் என சீரியஸ் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

மாமன்னன் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி, முழுமையாக அரசியலில் களமிறங்கிவிட்டார். இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.