ஜப்பானில் கல்யாணம்!! வைரலாகும் நெப்போலியன் மகன் திருமண அழைப்பிதழ் புகைப்படம்..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சினிமா துறையில் கலக்கிய இவர் அரசியலிலும் இறங்கி தன்னுடைய அடையாளத்தை முத்திரை பதித்தார். நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இவர்களில் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கிறார். அவருடைய சிகிச்சைக்கு இந்தியாவில் சரியான வசதி இல்லாத காரணத்தால் அமெரிக்கவில் சிகிச்சை அளித்து வந்தார். கடைசியில் மகனுக்காக அமெரிக்காவில் சென்ற அவர், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இந்தச் சூழலில் தனுஷுக்கு மிக விரைவில் திருமணம் நடிக்கவுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். ஜப்பானில் நடக்கவுள்ள நெப்போலியன் மகன் திருமண அழைப்பிதழ் ஓலைச்சுவடி போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதுவரை திருமண தேதி வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில் தனுஷ் - அக்ஷயா திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.