மரணம் வரை சென்ற இரண்டாம் மகள்!! கடைசி வரை நடிகை தேவயானியை காப்பாற்றிய தெய்வம்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. 1995ல் வெளியான தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
இயக்குனர் ராஜகுமாரனை 2001ல் திருமணம் செய்து இரு பெண் குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார். வெள்ளித்திரை வாய்ப்பு குறையும் போது சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். புதுபுது அர்த்தங்கள் சீரியல் நிறைவுக்கு பின் மாரி என்ற சீரியலில் முத்துப்பேச்சி என்ற கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் போது கடவுள் காப்பாற்றிய சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். தேவயானியின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கணவர் ராஜகுமாரன் இயக்கிய ஒரு படத்தினை தயாரித்துள்ளார்.
அப்படம் உருவாகும் போது பல பிரச்சனைகள் வந்தபோது ஆஞ்சநேயரை கும்பிட்டும் அம்மனை கும்பிட்டும் வந்துள்ளார். அதன்பின் அந்த படம் ரிலீஸ் ஆனதாக கூறியிருக்கிறார். அதேபோல் அவரது இரண்டாவது மகள் டெங்கு காய்ச்சல் வந்து மிகவும் சீரியஸாக இருந்தால்.
டாக்டர்கள் கூட முடியாது என்று கைவிட்டுவிட்டார்கள். மறுபடியும் நான், அம்மன் மற்றும் ஆஞ்சநேயரை கும்பிட்ட போது மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு மீண்டு வந்தாள் என்று உணர்ச்சி பூர்வமாக தேவயானி கூறியிருக்கிறார்.