விஜய்யின் பயத்தால் தான் அதை நிறுத்த காரணம்!! உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. லியோ படத்தின் டீசர் வெளியாகாத நிலையில் டிரைலர் 5 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.
ஏற்கனவே இசை வெளியீட்டு விழா நடக்க முடியாமல் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். அதற்கு பரிசாக பல போஸ்டர்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார்கள் லியோ குழுவினர்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்தான காரணத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்பதாலும் கூட்ட நெரிசலால் அவர்களை சமாளிக்க முடியாது என்பதால் விஜய் பயந்ததின் விளைவாக தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இப்படியான பட நிகழ்ச்சிக்கு மட்டும் வருவதால் விஜய்யை பார்க்க ரசிகர்கள் ஏராளமாக கூடுவார்கள். அப்படி 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடமிருக்கும் அந்த அரங்கில் 25 ஆயிரம் பேர் விஜய்க்காக வந்தால், அரங்கிற்கு வெளியில் தான் காத்திருக்க வேண்டும்.
இதை விரும்பாமல் தான் விஜய் ரத்து செய்ய கூறியிருக்கிறார் என்று தனஞ்செயன் கூறியிருக்கிறார். இதற்கு ரெட் ஜெயண்ட்க்கும் அரசியல் பழிவாங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜெகதீஷனும் கூறியிருந்தனர்.