தமிழுக்கு முடக்கு போடுகிறாரா நடிகர் தனுஷ்! அக்கடத்தேசத்தில் செட்டிலாகிறாரா?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் பல விருது மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து பல கோடி லாபத்தை ஈட்டித்தந்து வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து நல்ல விமர்சனத்தையும் வசூலையும் ஈட்டி வருகிறார்.

தற்போது மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தனுஷ், அடுத்தடுத்த படங்களின் கதைகளையும் பலர் கூறி வருகிறார்களாம். இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

பின் நான்கு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ள நிலையில், சில தெலுங்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சித்தாரா எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தில் ஒரு படமும், ஆர் ஆர் ஆர் படத்தினை தயாரிக்கும் டிவிவி எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தில் இரு படங்களும், மைத்ரூ மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு 5 படங்களில் நடிக்க ஒப்பந்தத்தை செய்துள்ளதால் தனுஷ் தெலுங்கு படத்தில் நடித்து பிஸியாக இருக்கவிள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்