கீர்த்தி சுரேஷுக்கு போன் போட்டு பேசிய ஒல்லி நடிகர்! வேலையை ஆரம்பிச்சுட்டாரே?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் மலையான பெண்ணாக தமிழில் நடிகையாக உருவெடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியான படங்கள் தோல்வியையே சந்தித்து வருகிறது என்று அவரை கிண்டல் செய்தும் வருகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அருண் மாதேஷவரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நடித்தார்.
முரட்டுத்தனமான கதைகளமாக அமைந்த இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தொடரி படத்தில் இணைந்து நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு கால் செய்து வாழ்த்து கூறியிருக்கிறார் தனுஷ்.
அதற்கு கீர்த்தி ஒரு நல்ல இயக்குனர் செல்வராகவன் சூப்பராக நடித்திருக்கிறார் அவருடன் நடிக்கும் போது எனக்கு பயமாக இருந்தது என்று கூறியுள்ளார். நானும் அவரிடம் இருந்து தான் நடிப்பை கற்றுக்கொண்டேன். வேறு மாதிரி நடித்துக்காட்டுவார் செல்வராகவன்.
இருவரும் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளாராம். அண்ணாத்த, சர்கார் வாரிபாட்டா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பு நல்லவரவேற்பை பெற்று கொடுத்திருக்கீறது சாணி காகிதம் படம்.