தனுஷ் பேச்சால் கதையையே மாற்றிய இயக்குநர்! வெற்றிக்கு இதுதான் காரணமாக அமைந்ததா?

dhanush karnan thanu marselvaraj
By Edward Aug 12, 2021 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்து தன் திரைப்படங்களால் பல ரசிகர்கள் மனதை ஈர்த்து வருபவர் நடிகர் தனுஷ். அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வெளியான படம் கர்ணன். இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கலைபுலி தானு தயாரிப்பில் வெளியானது.

ரிலீசான மூன்றாவது நாளில் கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் மூடப்பட்டது. அதனால் ஆரம்பத்தில் வசூல் அளவில் குறைந்தும் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியடைந்தது. பின் அமேசான் தளத்தில் விற்கப்பட்டு படம் வெளியாகி வசூலை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் முதலில் மாரி செல்வராஜ் கதாநாயகன் இறப்பது போன்று எழுதி இருந்தாராம். கதையை தனுஷிடம் முதலில் கூறியபோது நாயகன் இறந்தால் சரியாக இருக்காது என்று எடுத்துக்கூறியுள்ளார்.

அதேபோல் தயாரிப்பாளர் தானுவிடமும் கூறியபோது கிளைமேக்ஸ் காட்சியொல் ஹீரோ இறந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று கூறியுள்ளார். முழுக்க முழுக்க ஊருக்கும் உழைக்கும் இளைஞர் கடைசியொல் ஊருடன் அந்து சேர்ந்தால் படத்தின் கதைக்கு உயிர் கொடுக்கும் என்று கூறியுள்ளார் தானு.

அதன்படி மாறி செல்வராஜ் கிளைமேக்ஸ் காட்சியை ஊருக்கு சிறையில் இருந்து வந்ததும் மக்களை பார்த்தும் அவரை கொண்டாடுவது போன்ற காட்சியாக மாற்றதாக சமீபத்தில் தயாரிப்பாளர் தானு பேட்டியொன்றில் கூறியுள்ளார்.