என்னை எதுக்கு கூப்டுறீங்க!! தனுஷ்-க்கு நோ சொல்லி ஓகே சொன்ன அம்மா நடிகை!! காரணமே இதுதான்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து தான் இயக்கும் டி3 படத்தின் வேலைகளை பார்க்க ஆரம்பிக்கவுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் பற்றி பல பிரபலங்கள் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து வருவார்கள். அப்படி அம்மா கேரக்டரில் பட்டையை கிளப்பி வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனுஷ் மற்று விஐபி படத்தினை பற்றிய சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில், முதல் விஐபி படத்தில் நான் தனுஷ் கேட்டதும் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டேன். கதை சொல்லும் போது பண்ண மாட்டேன், தனுஷ் வீட்டிற்கு வந்து கதை சொல்லும் போது, என்னை இருக்கும் இதுல (கேரக்டர்) என்னை எதுக்கு கூப்டுறீங்க என்று கேட்டேன்.
அதற்கு தனுஷ், உங்களுக்காக பாட்டெல்லாம் ரெக்கார்ட் பண்ணிருக்கேன் என்றதும், நீங்க சொன்ன சீன்ல நான் இல்லவே இல்லை, நான் என்ன பண்றேன், செத்து வேற போறோம் என்று இப்படியெல்லாம் கேட்டேன்.
அதன்பின் ஓகே சொல்லி நடிக்கும் போது சாதாரணமாகத் தான் நடிச்சேன். பின் படத்தின் டப்பிங் போது தான் இவ்வளவு நடிச்சேனா, இத்தனை சீனில் இருந்தேனா என்று ஷாக்காகி விட்டதாகவும் படம் வெளியான பின் தான் தெரிந்தது இப்படியொரு தாக்கத்தை கொடுத்திருக்கு என்றும் நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியிருக்கிறார்.