விவாகரத்துக்கு பின் அந்த பெண்ணுடன் தனுஷ்-க்கு இரண்டாம் திருமணம்!! கஸ்தூரி ராஜா எடுத்த முடிவு..
நடிகர் தனுஷ் கடந்த 2004 -ம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரு மகன் உள்ளனர்.
சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை 2022 -ம் ஆண்டில் பிரிவு ஏற்பட்டது. சமீபத்தில் இருவருமே தங்களுக்கு விவாகரத்து வேண்டி விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், தனுஷின் இரண்டாம் திருமணம் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், "சொந்த பந்தத்தில் இருந்து ஒரு பெண்ணை பார்த்து தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க கஸ்தூரி ராஜா முடிவு எடுத்துள்ளார். சினிமா சார்ந்து இருந்தால் சில சமயங்களில் பிரச்சனை ஏற்படும். அதனால் சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்துவிடலாம் என்று அவருடைய குடும்பம் நினைக்கலாம்".
"விவாகரத்துக்கு பிறகு தனுஷுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவருடைய அம்மா அப்பாவும் முடிவு செய்துள்ளனர்" என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.
You May Like This Video
பொறுப்பு துறப்பு: பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கு விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒருசம்பந்தமும் இல்லை.