23 வயது நடிகையுடன் இணையும் தனுஷ்.. முதல் முறையாக கைகோர்க்கும் ஜோடி?
நடிகர் தனுஷ் தற்போது இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக குபேரா, இட்லி கடை என ரிலீஸுக்கு பல படங்கள் தயாராகி வருகிறது.
மேலும் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் Tere Ishq Mein படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபின், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்துள்ளார் தனுஷ்.
இதில் போர் தொழில் படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குநராக மாறியுள்ள விக்னேஷ் ராஜாவை தனுஷ் தனது லைனப்பில் வைத்துள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 23 வயது சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவை நடிக்க வைத்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.