150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு.. புதிய வீட்டில் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் குடிபோகவுள்ள தனுஷ்..
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வருகிறார்.

விவாகரத்து
அதேநேரத்தில் ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வந்த 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து, விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் முடிவை திரும்ப பெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.
இரு மகன்களின் எதிர்காலத்தை நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் இதற்கான மீட்டிங்கும் நடந்துள்ளது. வரும் நவம்பர் 18 ஆம் தேதி அவர்களின் திருமண நாளன்று இந்த செய்தி வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
பிரம்மாண்ட முறையில் வீடு
இந்நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்ட முறையில் வீடு கட்டி வருகிறார்.
அந்த கட்டிடத்தின் வேலைகள் நிறைவடையவுள்ள நிலையில், வருகிற ஜனவரி மாதம் அந்த வீட்டிற்கு தனுஷ் குடியேறவுள்ளாராம். இந்நிலையில் ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அந்த வீட்டிற்கு செல்லவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.