இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா! ஹாலிவுட் படத்தால் ஏமாற்றப்பட்ட தனுஷ்! வீடியோ..

Dhanush Hollywood Movies
By Edward May 24, 2022 02:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி பல விமர்சனங்களை சந்தித்தும் அவமானங்களை சமாளித்தும் இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார் தனுஷ்.

அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு பாலிவுட் படங்களிலும் நடித்து வந்த தனுஷ் ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகினார். பிரபல இயக்குனர்கள் ஜோ ரஸ்சோ, ஆண்டனி ரஸ்சோ இணைந்து இயக்கிய தி கிரே மான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியது. தனுஷ் இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நிறந்த இடத்தினை பிடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் டிரைலரில் சில நொடிகள் மட்டுமே தனுஷை காட்டியுள்ளாகள். இதனால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எங்கப்பா தனுஷை காணோம் என்றும் இதுக்கு தான் இவ்வளவு பில்ட்டப்பா என்று கலாய்த்து வருகிறார்கள்.