அந்த நடிகை தான் வேண்டும்!! இயக்குநருக்கு தனுஷ் போட்ட கண்டீசன்?
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் தகவல் சமீபத்தில் வெளியாகி வருகிறது. அப்படி லப்பர் பந்து படத்தை இயக்கிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் D56 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை நாயகியாக நடிக்க வைக்க இயக்குநர் தமிழரசன் பரிந்துள்ளார். ஆனால் நடிகர் தனுஷ் இந்த நடிகை தான் வேண்டும் என்று கரராக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சமீபகாலமாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ள நடிகை மமிதா பைஜு பொருத்தமாக இருப்பார் என்று தனுஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதியில் அவரையே ஒப்பந்தம் செய்யும்படி வலியுறுத்தியும் இருக்கிறார்.
அதற்கு காரணம், ஏற்கனவே தனுஷுடன் கர படத்தில் மமிதா பைஜு நடித்ததில் அவருக்கு பிடித்த நடிகையாக மாறியிருப்பதால் தான் தனுஷ் அவரை கமிட் செய்ய சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
