விவாகரத்தை தொடர்ந்து இன்னொரு பஞ்சாயத்தில் சிக்கிய தனுஷ்! 'ஒய் திஸ் கொலவெறி'
நடிகர் தனுஷ் பெயர் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு அவர்களுக்கு நடுவில் என்ன பிரச்சனை என பல கிசுகிசுக்கள் உலா வந்தது.
தனுஷ் மற்ற நடிகைகள் மற்றும் பெண்கள் உடன் தொடர்புபடுத்தி தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள் தான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. இருப்பினும் தனுஷ் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது படங்களில் நடிப்பதை மட்டும் வேலையாக செய்து வருகிறார்.
மற்றொருபுறம் தனுஷ் எங்கள் மகன் என ஒரு வயதான ஜோடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், அதன் விசாரணையில் தனுஷ் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலி என மீண்டும் புகார் எழுந்தது. அது பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது தனுஷ் பத்து வருடங்களுக்கு முன் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் மற்றொரு பஞ்சாயத்தை கொண்டு வந்திருக்கிறது.
தனுஷ் பாடிய அந்த பாடல் ஒரு விளம்பர படத்தில் வரும் பாடலின் காப்பி என தற்போது சர்ச்சை எழுந்தது. இது என்னடா தனுஷுக்கு வந்த சோதனை என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
ஆனால் உண்மையில் தனுஷ் பாடலை தான் அந்த விளம்பரத்தில் எடுத்து வைத்திருக்கின்றார்கள். தனுஷ் பாடல் வெளிவந்து சில வருடங்கள் கழித்து தான் அந்த விளம்பரம் வந்திருக்கிறது.