இயக்குநரை தூக்கி எறிந்த தனுஷ்! வில்லனாக மாறிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என கூறி வாய்கள் தற்போது தேசிய விருது வாங்கி வரிசையில் நின்று வருகிறார்கள். அப்படி அவரின் உயரத்திற்கு தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கொடிக்கட்டி வருகிறார்.

கையில் பல படங்களை வைத்தும் லைனில் காத்திருக்கும் இயக்குநர்களும் இருக்கும் நிலையில் ராட்சசன் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் தனுஷ் நடிக்கவிருப்பதால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

இதனால் இயக்குநர் ராம் குமார் சமீபத்தில் வசூல் மன்னனாக குறுகிய காலகட்டத்தில் உயர்ந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் கதையை கூறியுள்ளார். சிவாவிற்கும் அவரின் கதை பிடித்து போக ஓகே என்று கூறிவிட்டாராம்.

கையில் டான், சிங்கப்பாதை, அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு படம் என அவரும் பிஸியாக இருக்கிறார். அப்படங்கள் முடிந்தபின் கையெழுத்திட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்