வேண்டாம்னு நினைக்கிறேன்..ஐஸ்வர்யா காதலை ஏற்க தயங்கிய தனுஷ்!..காரணம் என்ன தெரியுமா?
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
Actors
Tamil Actors
By Dhiviyarajan
கடந்த 2004 -ம் ஆண்டு நடிகர் தனுஷை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இருவரும் 18 ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வோடு வாழ்ந்த அவர்கள், அதன் பின் பிரிந்த கதை அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இடையே திருமணத்திற்கு முன்பு நடந்த காதல் கதை பற்றி நாம் பார்க்கலாம் . ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் சகோதரி இருவருமே நண்பர்கள். அவரை சந்திக்க அடிக்கடி வரும் போது தனுஷ் மீது ஐஸ்வர்யாவின் பார்வை விழுந்தது.
தன்னை விட மூத்த பெண், அதிலும் தன்னுடைய சகோதரியின் தோழி, அவரை எப்படி காதலிப்பது என்ற தயக்கம் தனுஷ் இடத்தில் இருந்ததுள்ளது.
இவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும் ஐஸ்வர்யா தனுஷ் காதல் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி இருவீட்டாரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் நடத்தி வைத்தனர்.