ராயன் பட தேசிய விருது விமர்சனம்..தட்டி விட்டாதீங்க!! நடிகை தனுஷ் பதிலடி..

Dhanush Gossip Today Captain Miller Raayan National Film Awards
By Jai Jul 27, 2026 05:45 AM GMT
Report

தனுஷ்

2024ஆம் ஆண்டுக்கான 72வது தேசிய விருதுகள் ஜூலை 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு 10 விருதுகள் இடம்பெற்றுள்ளது. அதில், ராயன் சிறந்த தேசிய, சமூக, சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் படம் என்றும் கேப்டன் மில்லர் சிறந்த பிரிவு - தனுஷ் இடம்பெற்றுள்ளார்.

ராயன் பட தேசிய விருது விமர்சனம்..தட்டி விட்டாதீங்க!! நடிகை தனுஷ் பதிலடி.. | Dhanush Response Raayan National Award Controversy

இந்த தேசிய விருது அறிவிப்பில், ராயன் படத்துக்கு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படத்தைவிட 2024ல் சிறந்த படங்கள் பல வந்தும் எப்படி தேர்வு செய்யப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியாளையம் அருகே மஞ்சங்கரணை பகுதியில் ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சி நேற்று ஜூலை 26 ஆம் தேதி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த வருடம் அந்த படத்தைவிட தகுதியான படங்கள் நிச்சயமாக இருக்கிறது. அப்படங்களுடைய ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினர், அதை நான் முழுமையாக மதிக்கிறேன்.

ராயன் பட தேசிய விருது விமர்சனம்..தட்டி விட்டாதீங்க!! நடிகை தனுஷ் பதிலடி.. | Dhanush Response Raayan National Award Controversy

தட்டி விட்டாதீங்க

அது ஒரு கனா காலம் படம் ரிலீஸானது, அப்போது சின்ன பையன், அந்த படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார்கள். நானும் ரொம்பவும் ஆசையாக இருந்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை, அதன்பின் புதுக்கோட்டை, 3, மயக்கம் என்ன மரியான், ராஞ்சனா, வடசென்னை போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னார்கள், ஆனால் கிடைக்கவில்லை.

ஒருசில விஷயங்கள் நாம் எவ்வளவு தான் முயற்சித்தாலும் அமைத்து கொள்ள முடியாது. அது தானாக அமையும். இந்தமுறை எனக்கு அமைந்துள்ளது. ஒரு தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது, தட்டி விடாதீங்க, தட்டி கொடுங்க என்று பேசியிருக்கிறார் தனுஷ்.