சினிமாவே வேண்டாம் என நாடு கடத்த பிளான் போட்ட தந்தை! அக்காவை தூதாக அனுப்பியசெல்வராகவன்

Dhanush Selvaraghavan Kasthuri Raja
By Edward May 11, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் தனக்கெரு ஒரு பாணியில் படங்களை எடுத்து வெற்றியை கண்டு வருபவர் இயக்குனர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன்களாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர்கள் செல்வராகவன், தனுஷ்.

இப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் சினிமாவில் நுழைந்த 20 ஆண்டுகளை கொண்டாடி வருகிறார்கள். சமீபத்தில் தன்னுடைய இரு மகன்களை சினிமாவில் எப்படி உள்ளே கொண்டு வந்தேன் என்ற செய்திகளையும் அவரின் சினிமாவில் அனுபவங்களையும் இயக்குனர் கஸ்தூரி ராஜா பகிர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் சினிமாவே இருவரும் வரக்கூடாது என்று நினைச்சேன். செல்வராகவன் கல்லூரியில் படிக்கும் போது நான் சினிமாவிற்கு போகவேண்டும் என்று கேட்டான். படிப்பு முடி அதன்பின் பார்ப்போம் என்று கூறியது அதுவரை அமைதியாக இருந்தார்.

இந்த கேப்பில் அவரை வெளிநாட்டில் கடத்தலாம் என்று முடிவெடுத்தேன். இதனை அறிந்து கோபட்ட செல்வராகவன் தான் எழுதிய நாவல் புத்தகத்தை படித்து அந்த கதையை தான் துள்ளுவதோ இளமை படத்தினை இயக்கினார் என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு காதல் கொண்டேன் படத்தின் கதையை எழுதி வைத்திருந்தார். அப்போது அவரது அக்கா கார்த்திகா என்னிடம் இரவு 11 மணியளவில் ஏதோ கூற வந்தார். அப்போது செல்வராகவனின் காதல் கொண்டேன் கதையை கூறினார்.

ஆரம்பத்தில் யாருடனும் அசிஸ்டண்ட்டாக இல்லை. அவர் இயக்குனராகுவான் என்பதில் நம்பிக்கை இல்லை. பின் கதை நன்றாக இருக்கு என்று கூறியதும், அக்கா, அம்மா இருவரும் கடன் வாங்கி படத்தை எடுங்கள் என்று கூறினார்களாம்.

அதன்பின் உருவாகியது தான் காதல் கொண்டேன். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் பாட்டு இல்லை என்றால் துள்ளுவதோ இளமை படமே இல்லை என்று கூறியுள்ளார் கஸ்தூரி ராஜா.