தாடியுடன் தேவதாஸாக மாறிய தனுஷ்! கடைசியில் அண்ணனையே நம்பும் நிலைமை..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவரெல்லாம் நடிகரா? என்று கேலி செய்யும் அளவிற்கு பலரால் கிண்டல் செய்யப்பட்டார். அதில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் இருந்த வெறி தற்போது வரை விடாமல் தேசிய விருது பெறும் நடிகராக்கியுள்ளது.
அப்படி அவர் நடித்த சமீபத்திய படங்கள் மக்களையே வியக்கவைக்கும் அளவிற்கு மாறியிருக்கிறார். அப்படி சரியாக சென்று கொண்டிந்த வாழ்க்கையில் விவாகரத்து வந்து சுக்குனூறாக்கியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்தார்.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல் தங்கள் வழியில் சென்று வருகிறார்கள். ஐஸ்வர்யா தன் ஆல்பம் பாடலை முடித்தப்பின் பாலிவுட் படத்தினை ஆரம்பிக்கவுள்ளார். தனுஷும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களிலும் கவனம் செலுத்து வருகிறார்.
விவாகரத்தான பின் பிள்ளைகளுடன் இருக்கும் சமயத்தை தவிர தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் ஆறுதலில் இருந்து வருகிறார்.
நானே வருவேன் படத்திற்காக இருவரும் பல வேலைகளை செய்து வருகிறார்கள். தற்போது மொட்டை மாடியில் இருந்து கொண்டு தனுஷ் தாடியுடன் காணப்படும் புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
@dhanushkraja and me capturing moments. PC @omdop #NaaneVaruven pic.twitter.com/zotpeN2Exf
— selvaraghavan (@selvaraghavan) April 6, 2022