மாமான்னா இப்படி இருக்கணும்.. மாப்பிள்ளைக்கு ரொமான்ஸ் சொல்லித்தரும் தனுஷ்
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி இயக்குனராகவும் தற்போது வலம் வருகிறார்.
இவர் இயக்கியும், நடித்தும் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ராயன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இப்படத்தை தொடர்ந்து, தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷின் அக்கா மகனான பவீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ரொமான்ஸ்
இந்நிலையில், தனுஷ் அவரது அக்கா மகன் பவீஷ்க்கு பாடல் ஒன்றில் அனிகா சுரேந்திரனுடன் எப்படி ரொமான்ஸ் செய்யவேண்டும், எப்படி அவரை தூக்கிச் சுற்ற வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட நெட்டிசன்கள் மாப்பிள்ளைக்கு தனுஷ் சிறப்பாக ரொமான்ஸ் சொல்லி கொடுக்கிறார், நல்ல தாய்மாமன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
. @dhanushkraja Cute - uh 🤌pic.twitter.com/8kXhHzCcsy
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) December 20, 2024