நன்றிகெட்ட மனுஷனாக மாறிய தனுஷ்! எல்லாம் விவாகரத்து சம்பவம் தான் காரணம்!!

Dhanush Rajinikanth
By Edward May 11, 2022 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2002ல் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகை தனுஷ். கஸ்தூரிராஜா மகன்களாக தனுஷும், செல்வராகவனும் முதல் படத்திலேயே விமர்சனங்களை சந்தித்தனர்.

தனுஷை பார்த்து இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கூறும் அளவிற்கு சிலரின் பேச்சு அவரை கஷ்டப்படுத்தியது என்று பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அண்ணன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து ஏளனமாக பேசியவர்கள் என்னம்மா நடிக்கிறான்பா என்று கூறும் அளவிற்கு நடிப்பில் மிரள வைத்தார் தனுஷ்.

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனுஷிற்கு பக்கபலமாக ஐஸ்வர்யாவும் சூப்பர் ஸ்டாரும் இருந்து வந்தனர்.

நடித்த படங்கள் மூலம் மக்கள் மனதில் தனி இடத்தினை பெற்று வந்த தனுஷ் தேசிய விருது வாங்கி பெருமை சேர்த்தார். அதன்பின் பாலிவுட், ஹாலிவுட் என முன்னேற்றத்தை அடுக்கடுக்காய் கொண்டு சென்றார்.

இப்படியொரு புறம் இருக்கையில் தனுஷ் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த செய்தியை வெளியிட்டார்.

சூப்பர் ஸ்டாரில் இருந்து பலர் இருவரையும் சேர்க்க பல முயற்சிகள் எடுத்தும் விணாய் போனது. இந்நிலையில் தனுஷ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து 20 ஆண்டுகளை கடந்துள்ளார்.

இதற்கு, ரசிகர்கள், ஊடகங்கள், சமுகவலைத்தளங்கள் தன்னுடன் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழிற்நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய அண்ணனும் குருவுமாகிய செல்வராகவனுக்கு நன்றி. இது பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. என்னை இந்த இடத்தில் நிற்கவைத்து என்னை அடையாளப்படுத்திய என் அப்பா கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி.

தினமும் எனக்கு பிராத்தனை செய்து பாதுகாக்கும் என் அம்மாவுக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இறுதியில் எண்ணம் போல் வாழ்க்கை, அன்பை பரப்புங்கள், ஓம் நமச்சிவாயா என்று கூறி அறிக்கையை வெளியிட்டார்.

இதனை பார்த்த பலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஏன் மறந்துவிட்டீர்கள். அவர்கள் மருமகன் என்ற பெயர் இருந்துதான் இந்த பாலிவுட், ஹாலிவுட் என வாய்ப்புகள் வந்தது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். 

Gallery