திருமணப்பேச்சு போகும் நேரம்!! தனுஷும் மிருணாளும் இப்படி இருக்காங்களா? வைரல் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று நடித்து மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ்.
அவர் நடிப்பில் கடைசியாக தேரே இஷ்க் மே படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டியும் இருந்தது. இதனையடுத்து இன்று தனுஷ் கர என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

தனுஷ் - மிருணாள் தாகூர்
ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்த தனுஷ் பற்றிய சில கிசுகிசுக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
42 வயதான தனுஷ், 33 வயதான நடிகை மிருணாள் தாகூரை பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்,
தனுஷும் மிரணால் தாகூரும் அவர்கள்
வீட்டில் இணைந்து பார்ட்டி கொண்டாடிய
புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு
வைரலாகி வருகிறது. மேலும் தனுஷ் -
மிருணாள் தாகூர் காதல் திருமணம் குறித்த
செய்திகள் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக
இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.