ஏமாந்து பொண்ண கொடுத்துட்டாங்க..தனுஷை கட்டாயப்படுத்தினேன்!! கஸ்தூரி ராஜா புலம்பல்..
கஸ்தூரி ராஜா
இயக்குநர் கஸ்தூரி ராஜா மகன்களாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளவர்கள் செல்வராகவன், தனுஷ். இருவரும் நடிப்பு, இயக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கஸ்தூரி ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், நான் என் மனைவி விஜயலட்சுமி பற்றி பேசியாகவேண்டும். அவர் ஒரு கிராமத்து பெண். அப்போது நான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால் அவர்கள் வீட்டில் ஏமாந்து எனக்கு பெண்ணை கொடுத்துவிட்டார்கள். அவர் மட்டும் இல்லை என்றால் இன்று இந்த குடும்பமே இல்லை.
அதனால் தான் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா பிரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன் என்று கூறியிருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் தனுஷை நடிக்கவே வேண்டாம் என்று வீட்டில் சொன்னார்கள். ஆனால் நான் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன்.
செல்வராகவன் - தனுஷ்
செல்வராகவன் 2ஆம் ஆண்டிலேயே பொறியியல் படிப்பு வேண்டாம் என்று முடிவெடுத்த போது நானோ படிப்பை முடித்துவிட்டு வா, சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொன்னேன். சொன்னதை கேட்டு செல்வாவும் அடுத்தநாள் காலேஜ் சென்று படிப்பில் கோல்ட் மெடல் வாங்கினான்.
நீங்கள் சொன்னதை நான் செய்துவிட்டேன், பின் நான் சொன்னதை நீங்கள் செய்யுங்கள், அதுதானே அக்ரீமெண்ட் என்று சொன்னான். பின் எவ்வளவோ முயற்சி செய்து உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் அவரே இயக்குநராக மாறிவிட்டார் என்று கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.